கிஸ் சீன்களுக்கு கட்டுப்பாடு ஏன்? ஜெயம் ரவி பதில்

Last Updated: சனி, 15 டிசம்பர் 2018 (19:10 IST)
ஜெயம் ரவி தற்போது அடங்கமறு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 21 ஆம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.
 
கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் குறித்து ஜெயம் ரவி பேசியது பின்வருமாறு, 
 
பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் குற்றவாளிகளுக்கு இப்போது கொடுக்கும் தண்டனை போதாது. இதைவிட அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். 
 
அப்போதுதான் வக்கிர ஆசாமிகளுக்கு பயம் இருக்கும். அது என்ன தண்டனை, அதை எப்படி வழங்குவது என்பதை சொல்லும் படமாக, அடங்க மறு உருவாகியுள்ளது என தெரிவித்தார். 
 
மேலும், ரசிகர்களிடம் எனக்கு பேமிலி ஹீரோ இமேஜ் இருப்பதால், ஹீரோயினுடன் முத்தக்காட்சி மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் சில கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறேன். 
 
எப்போதும் அதை மீற மாட்டேன். அடுத்து காஜல் அகர்வாலுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். என் 25 வது படம் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என தெரிவித்தார். 


இதில் மேலும் படிக்கவும் :