திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 5 டிசம்பர் 2018 (13:48 IST)

"ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனும் கோவில் தான்" அடங்கமறு ஸ்னீக் பீக்!

‘டிக் டிக் டிக்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவி அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேலின் ‘அடங்க மறு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதற்கு முன்னதாக, பேராண்மை, தனி ஒருவன், மிருதன், போகன் ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
 

வழக்கமான போலீஸ் கதாபாத்திரம் போல் இல்லாமல், இப்படத்தில் சற்று வித்தியாசமான, யாருக்கும் அடங்காத போலீசாக ஜெயம் ரவி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அண்மையில் வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெளிவந்த படத்தின் டீசர் சிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
 
இந்நிலையில் தற்போது படத்தின் ஸ்னீக் பிக் ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. 
 
"அடங்க மறு" படம் வரும் 21ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், போலீஸ் கதையை மையப்படுத்திய இப்படத்தின் புரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில், பிரச்சனையை தீர்க்க மக்கள் போகும் இடம், ஒன்று கோயில், மற்றொன்று போலிஸ் ஸ்டேசன். அப்படின்னா, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனும் கோயில் தான் என்று நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார்.
 
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.