புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (10:14 IST)

ஜெயம் ரவியின் பூமி படத்தை மடக்கிப் போட்ட ஓடிடி பிளாட்பார்ம்!

ஓடிடி தளத்தில் அடுத்ததாக ஜெயம் ரவி நடிக்க இருக்கும் பூமி திரைப்படம் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் லக்‌ஷ்மண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பூமி’. விவசாயத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் விவசாயம் செய்யும் ஹீரோவாகவே நடித்துள்ளார் ஜெயம் ரவி. இந்த படத்தில் நிதி அகர்வால் நாயகியாகவும், சதீஷ் நண்பர் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இமான் இசையமத்துள்ளார். சென்னை எக்ஸ்பிரஸ், சிங்ஹம் உள்ளிட்ட பிரபல இந்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய டுட்லீ இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். விவசாயத்தை மையமாக கொண்டு சமூக கருத்து பேசும் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவியின் 25 ஆவது படமாக உருவாகியுள்ள இந்த படம் லாக்டவுன் இல்லை என்றால் ரிலிஸ் ஆகி இருக்கும்.

இப்போது தியேட்டர்கள் திறப்பது குறித்து உறுதியான தகவல் இல்லை என்பதால், இந்த படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.