சீரியல் நடிகை மீது இம்புட்டு பாசமா - தன் ரசிகருக்கு சித்ரா கொடுத்த பரிசு!

Papiksha Joseph| Last Modified சனி, 26 செப்டம்பர் 2020 (16:46 IST)

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே சித்ரா. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் குடும்ப ரசிகர்களை பெற்று ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்தது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பலரும் தொலைக்காட்சி தொடர்களை மிஸ் பண்ணியுள்ளார். அவர்களுக்காகவே வீட்டில் இருந்தபடியே அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வித விதமான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் சித்ரா ஹேமந்த் என்ற தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடித்து முடிந்துவிட்டது. இந்நிலையில் சித்ரா தன்னுடைய ஃபேன் பேஜ்ஜில் மீம்ஸ் டாஸ்க் வைத்து அதில் தன்னை அதிகம் கவர்ந்த மீம் கிரியேட்டருக்கு தன்னுடைய புகைப்படம் அடங்கிய ஆல்பம் ஆட்டோகிராப் உடன் பரிசு வழங்கி திண்டுக்கல் ரசிகர் ஒருவரை இம்ப்ரெஸ் செய்துள்ளார். பொதுவாக ரசிகர்கள் தான் பிரபலங்களுக்கு பரிசு வழங்குவார்கள். ஆனால், முல்லை தன் ரசிகருக்கு பரிசு வழங்கி அசத்தியுள்ளார்.


Thank u soo much for the love @surprise_machi Congratulations @chithu_rasigan

A post shared by Chithu Vj (@chithuvj) onஇதில் மேலும் படிக்கவும் :