வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 23 மார்ச் 2019 (15:22 IST)

மகிழ் திருமேனி & ஜெயம் ரவி – கைகோர்க்கும் அசத்தல் காம்போ !

தடம் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் மகிழ் திருமேனியுடன் கைகோர்க்கிறார் ஜெயம் ரவி.

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான அடங்கமறு படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் என்ற புதுமுக இயக்குனரின் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதையடுத்து அவர் ஸ்கிரீன் சீன் நிறுவனம் எனும் வரிசையாக ஜெயம் ரவி நடிக்கும் 3 படங்களைத் தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளது.

இந்தப் படங்களில் ஒன்றின் இயக்குனராக மகிழ்திருமானி ஒப்பந்தமாகியுள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தடம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தடம் படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. தடம் படத்தின் மூலம் பல கோடு ரூபாய் லாபம் பார்த்ததால் மீண்டும் இயக்குனர் மகிழ் திருமேனியை வைத்து அடுத்தப்படத்தை தொடங்க இருக்கிறது. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.