செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (07:19 IST)

ஜவான் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் ப்ரிவியூ ஆகியவை வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் பெற்றுள்ளன. பேன் இந்தியா ரிலீஸாக ஐந்து மொழிகளில் ரிலீஸாகும் இந்த படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்த படத்தின் விநியோக உரிமையை கோகுலம் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் இயக்குனர் மற்றும் தமிழ் நடிகர்கள் பட்டாளம் இருப்பதால் இந்த படத்துக்கு தமிழ்நாட்டிலும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.