வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 23 மே 2022 (17:01 IST)

நயன்தாரா - விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலில் வழிபாடு

nayanthara -vignesh
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும்  கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வரும் நிலையில்,  இவர்கள் எப்போது திருமணம் செய்யப்  போகிறார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடிகை நயன் தாரா,  தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இரு குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தல் நடந்ததாகக் கூறினார்.

இந்நிலையில் வரும் ஜூன் 9 ஆம் தேதி  நடிகை நயன் தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருப்பதியில்  திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இன்று , நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருச்சிஸ்ரீரங்க நாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன் பின், லால்குடி அருகேயுள்ள விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோவிலில் வழிபாடு செய்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.