1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 15 ஜூலை 2023 (12:47 IST)

இன்று மாலை ஜெயிலர் இரண்டாவது சிங்கிள் ப்ரிவ்யூ! சன் பிக்ஸர்ஸ் கொடுத்த அப்டேட்!

‘’ஜெயிலர்’ பட முதல் சிங்கிள் பாடலான காவாலா வெளியாகி இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங்கில் உள்ள  நிலையில், 2 வது சிங்கிள் பாடலான ஹுக்கும் என்ற பாடல் ஜூலை 17 ஆம் தேதி வெளியாகும் என்று  படக்குழு தெரிவித்துள்ளது.  இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த பாடலின் ப்ரிவ்யூ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன்பிக்ஸர்ஸ் அறிவித்துள்ளது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.