வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 15 ஜூலை 2023 (12:37 IST)

நடிகர்களின் பாதுகாவலர்களுக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

shah rukh  khan - salman khan
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள்  பல கோடிகள் சம்பளம் பெறுகிறார்கள். இவர்கள் சில  நிமிடங்கள் வரும் ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கும் அதேபோல்  பல மடங்கு சம்பளம் பெறுகிறார்கள்.

இந்த நிலையில், இவர்கள் தங்கள் பாதுகாவலர்களுக்கு கொடுக்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகிறயுள்ளது.

அதன்படி, ஷாருக்கானின் பாதுகாவலராக வேலை பார்க்கும் ரவிசிங்கிற்கு மாதம் ரூ.17 லட்சமும், சல்மான் கானிடன் 29 ஆண்டுகளாக பாதுகாவலராக பணியாற்றும் ஷேரா ரூ.15 லட்சமும் அக்ஷய்குமாரின் பாதுகாவலருக்கு ஆண்டிற்கு ரூ.1.2 கோடியும், அமிதாப் பச்சனின் பாதுகாவலர் ஜிதேந்திர சிண்டேவுக்கு ஆண்டிற்கு ரூ.1. கோடியும், தீபிகா படுகோனே மற்றும் அனுஷ்கா சர்மாவிடம் பணியாற்றும் வேலைபார்க்கும் ஜலால், பிரகஷ் சிங்கிற்கு ஆண்டிற்கு ரூ.1.2 கோடி சம்பளம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகிறது.