செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (16:14 IST)

கடலூரில் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு: ரஜினியை பார்க்க குவிந்த கூட்டம்!

Jailer
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கடலூரில் நடைபெற்று வருவதை அடுத்து ரஜினியை பார்க்க அந்த பகுதி மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடலூர் அருகே உள்ள அழகிய நத்தம் என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டு இருக்கும் நிலையில் ரஜினியை பார்ப்பதற்காக அந்த பகுதி மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் தொலைவிலேயே நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், தகுந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக தெரிகிறது
 
ஏற்கனவே இதே பகுதியில் தான் படையப்பா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது கூட்டம் கூடியது என்பதும் அதன் பிறகு தற்போதுதான் இங்கே ரஜினிகாந்த் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Mahendran