ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனுக்கு ஸ்கூட்டரை பரிசாக அளித்த நடிகர்!
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ”ஜெயிலர்” படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களோடு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார், மலையாளத்தில் இருந்து மோகன் லால், தெலுங்கில் இருந்து சுனில் என ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள்.
தற்போது ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவின் மங்களூர் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் ஷுட்டிங் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சனுக்கு, படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் ஒரு ஸ்கூட்டியை அன்பளிப்பாக அளிக்க, அதை நெல்சன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர வைரல் ஆகியுள்ளது.