1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 6 மார்ச் 2023 (08:42 IST)

‘மீனா 40’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

1980 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி  90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா என்பதும் அவரது படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட மீனாவுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் விஜய் நடித்த தெறி உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மீனா சினிமாவில் நடிக்க தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அதைக் கொண்டாடும் விதமாக மீனா 40 என்ற நிகழ்ச்சியை அவரின் திரையுலக நண்பர்கள் நடத்தியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராஜ்கிரண் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு மீனாவைப் பற்றி தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். மேலும் மீனாவுடன் பணியாற்றிய நடிகர், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.