'தலைவர் 170’ : லைகாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
'தலைவர் 170 : லைகாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 170 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் சற்று முன் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
லைகா குழுமம் தலைவர் சுபாஸ்கரன் அவர்கள் பிறந்த நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தலைவர் 170 திரைப்படத்தின் அறிவிப்பை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். லைகா புரொடக்ஷன் நிறுவனத்தின் மற்றுமொரு பெருமைமிகு தருணம் இது. தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்கின்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தலைவர் 170 திரைப்படத்தின் பணிகள் இனிதே ஆரம்பம்.
இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் இசைவழி நம் இதயங்களை இணைக்கும் திரு அனிருத் இசையில் பிரம்மாண்டமான திரைப்படங்களை படைத்தளிக்கும் திரு சுபாஷ்கரன் தயாரிப்பில் லைகா புரொடக்சன் தலைமை பொறுப்பாளர் திரு தமிழ் குமரன் அவர்களின் தலைமையில் தலைவர் 170 படம் 2024 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சூப்பர் ஸ்டார் அவர்களின் ஒவ்வொரு திரைப்பட வெளியிடும் ரசிகர்கள் கொண்டாடும் திருவிழா தான். அவருடன் மீண்டும் இணைவதில் லைகா புரொடக்சன் பெருமிதம் கொள்கிறது. அனைவரின் வாழ்த்துக்களோடு 2024 மாபெரும் கொண்டாட்டத்திற்கு தயாராவோம், நன்றி!!!
இவ்வாறு லைகா நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva