1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (19:30 IST)

சுசீந்திரன் - ஜெய் படத்தின் டைட்டில் இதுதான்!

மிகக் குறுகிய காலத்தில் ஒரு திரைப்படத்தை எடுத்து முடிப்பவர் என்று கோலிவுட்டில் புகழ் பெற்ற ஒரு இயக்குனர் என்றால் அவர் சுசீந்திரன் தான். இவர் சமீபத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் என்ற திரைப்படத்தை 30 நாட்களில் முடித்து விட்டார் என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஏற்கனவே இவர் ஜெய் நடிப்பில் உருவான ஒரு படத்தை இயக்கி இருந்தார் என்றும் அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது 
 
பாரதிராஜா உள்பட பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பதும் நடிகர் ஜெய் இந்த படத்தில் இசை அமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’குற்றமே குற்றம்’ என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது