திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 ஏப்ரல் 2021 (15:15 IST)

எனக்கும் அஜித்துக்கும் மனக்கசப்பு இருந்தது உண்மை… ஸ்டண்ட் மாஸ்டர் பதில்!

ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் தனக்கும் அஜித்துக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மனக்கசப்பு பற்றி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கியமான ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஜாக்குவார் தங்கமும் ஒருவர். இவர் உள்பட பலர் தலைமையில் நடந்த பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா என்ற நிகழ்ச்சியில் அஜித் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு எதிர்வினையாக ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் அஜித்தை தாக்கி பேசினார். இதனால் கோபமான அஜித் ரசிகர்கள் ஜாக்குவார் தங்கத்தின் வீட்டுக்கு சென்று தாக்க முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பேசிய ஜாக்குவார் தங்கம் ‘எனக்கும் அஜித்துக்கும் மனக்கசப்பு இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது நாங்கள் எங்கு பார்த்தாலும் மனம் விட்டு பேசிக்கொள்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.