வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (17:34 IST)

வா வான்னு கூப்பிட்டு மூச்சு முட்ட வச்சு செய்யும் நடிகை! - முடியாமல் ஓடி ஒளியும் விமல்!

நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு" படத்தின் 3 நிமிட காமெடி வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 
 
சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு " படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.
 
கிளாமர் கலந்த ஹூயூமர் படமாக உருவாகிவரும் இந்த படத்தின் ஸ்னீக் பீக் ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
 
இளைய தலைமுறைகளுக்கு எது பிடிக்குமோ அதை திரைபோட்டு மறைக்காமல் அப்படியே சொல்லியிருக்கிறார் இயக்குனர்  ஆர்.சர்வண் . இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்கள் நடை பெற்றது.
 
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள இப்படத்தின் ஸ்னீக் பீக்கில் வீடியோவில், விமலை நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்வது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் வான்னு கூப்பிட்டு வச்சு செய்யும் நடிகையால் விமலின் நிலைமை பரிதாபமாக உள்ளது. 
 
இப்படம் முழுவதும் டபுள் மீனிங் கொண்டதாக உருவாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது இளசுகளின் வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.