வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 20 மே 2020 (20:40 IST)

கேவாக மாறத் தோன்றுகிறது… பிரபல இயக்குநர் டுவீட்

இயக்குநர் ராம் கோபால் வர்மா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், இன்று ஒரு டுவீட்டை பதிவிட்டுள்ளார். அதுவும் ஏடாகூடமாக டுவீட்டாக இருக்கவே சினிமா வட்டாரத்தில் பரப்பரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இன்று ஜூனியர் என்.டி.ஆருக்கு 37 ஆவது பிறந்தநாள். எனவே இன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது ரசிகர்களும் இன்று டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் சிக்ஸ்பேக் புகைப்படத்தைப் பதிவிட்டு ;;நான் ஒரு ஓரின சேர்க்கையாளன் இல்லை என்பது உனக்குத் தெரியும்.ஆனால் இந்தப்புகைப்படத்தைப் பார்த்தால் அப்படி ஆகிவிடலாம் எனக்குத் தோன்றுகிறது ..என்ன உடம்பு நைனா என தெரிவித்துள்ளார்.