வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vm
Last Modified: வியாழன், 21 மார்ச் 2019 (13:22 IST)

செம்ம...செம்ம... அரபிகடலும் அதிரும் தலைவா.... மரணவெயிட்டிங்...மோகன்லாலின் லூசிபர் டிரெய்லர்

சில படங்களை பார்க்கும் போது, சிலருடைய நடிப்பை பார்க்கும் போது  நம் உடல் மெய்சிலிர்க்கும் அந்த வகையில் பார்த்த உடன் மெய்சிலிர்க்க வைத்தது மோகன்லாலின் லூசிபர் டிரெய்லர். என்ன ஒரு நடிப்பு, என்ன ஒரு கம்பீரம் என வாயார புகழத் தோன்றியது.
நிச்சயமாக மலையாளத்தில் சம்சாரிக்கும் அத்தனை பேருக்கும் இந்த டிரெய்லர் செம்ம எண்டர்டெய்னராக இருந்திருக்கும். அரசியல்வாதியாக, தலைவனாக மிளரவைக்கும் நடிப்பில் மோகன்லாலுக்கு நிகர் மோகன்லாலே... இந்த படத்தில் லூசிபராக மிரட்டியுள்ளார்.  இப்போது விஷயத்துக்கு வருவோம். பிரத்விராஜ் குமரன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துள்ள லூசிபர் டிரெய்லர் நேற்று இரவு வெளியானது. இப்படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளளார். தீபக் தேவ் இசையமைத்துள்ளார். முரளி கோபி திரைக்கதை எழுதியுள்ளார்.