வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (07:44 IST)

யூடியூபில் அதிக டிஸ்லைக்குகள் பெற்ற 'யூடியூபின் வீடியோ

உலகின் முன்னணி வீடியோ இணையதளமான 'யூடியூப் இணையதளம் இன்றைய இளையதலைமுறையினர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒரு சிறந்த ஆசிரியராக யூடியூப் உள்ளது. இதில் இல்லாத விஷயமே இல்லை என்ற நிலையில் அனைத்து தரப்பினர்களும் யூடியூபால் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தொகுத்து யூடியூப் நிர்வாகம் ஒரு வீடியோவை வெளியிடும். தனது இணையதளத்தில் வெளியாகும் இந்த சொந்த வீடியோ அதிக மக்களை கவர வேண்டும் என்பதற்காக இதில் சுவாரஸ்யமான விஷயாங்கள் இணைக்கப்பட்டிருக்கும்

ஆனால் துரதிஷ்டவசமாக 2018ஆம் ஆண்டு நிகழ்வுகளை தொகுத்து வழங்கப்பட்ட வீடியோ, யூடியூப் வரலாற்றில் அதிக டிஸ்லைக்குகளை பெற்று மோசமான சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை யூடியூபில் அதிக டிஸ்லைக்குகளை பெற்ற வீடியோவாக கனடா நாட்டின் பாடகர் ஜஸ்டீன் ஃபீபரின் பேபி’ என்ற பாஃப் ஆல்பம் இருந்தது. ஆனால் இந்த சாதனையை யூடியூபின் வீடியோ எட்டு நாட்களில் முறியடித்து அதிக டிஸ்லைக் வீடியோ என்ற மோசமான சாதனையை பெற்றுள்ளது. இந்த வீடியோ இதுவரை 13 மில்லியனுக்கும் அதிகமான டிஸ்லைக்குகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.