வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 28 ஜனவரி 2023 (09:22 IST)

சீக்கிரம் அதிகாரப்பூர்வ அறிவிப்ப விடுங்கப்பா… அஜித் 62 படம் பற்றி பரவிய அதிர்ச்சி தகவல்!

துணிவு படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க உள்ள அஜித் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியானது.

சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இது தவிர படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சக தொழில்நுட்பக் கலைஞர்கள் என யாரும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது படத்தின் கதையில் லைகா நிறுவனத்துக்கு திருப்தி இல்லாததால் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டு வேறு இயக்குனரை தேடுவதாக நேற்று முழுவதும் சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவின.

ஷூட்டிங் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இப்படி ஒரு வதந்தி பரவி அஜித் ரசிகர்களை குழப்பியது. அஜித் 62 படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை இப்படி ஏதாவது வதந்திகள் தினமும் பரவிக்கொண்டேதான் இருக்கும்.