1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (21:16 IST)

தனுஷின்'' வாத்தி'' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

vathi
தனுஷின் வாத்தி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடித்துவரும் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படத்திற்கு ‘வாத்தி’ மற்றும் ’சார்’ என்ற டைட்டில்கள் வைக்கப்பட்டு உள்லது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை வெங்கட் அட்லோரி இயக்கி வருகிறார்.  ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பைபெற்றுள்ள நிலையில் ரசிகர்களிடையே வாத்தி படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வாத்தி திரைப்படம் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை தமிழகத்தில் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தீபாவளிக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தையும் அன்புச்செழியன்தான் ரிலீஸ் செய்ய உள்ளார்.