வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (10:59 IST)

இந்து மதக் கடவுளை இழிவுபடுத்தியதா டாண்டவ் வெப் சீரிஸ் – அமேசான் ப்ரைமுக்கு சம்மன்!

சமீபத்தில் வெளியான டாண்டவ் என்ற வெப் சீரிஸ் இந்து மத உணர்வுகளை இழிவுபடுத்தியதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

நடிகர்கள் சைஃப் அலிகான் மற்றும் டிம்பிள் கம்பாடியா உள்ளிட்டோர் நடித்திருக்கும் வெப் சீரிஸ் டாண்டவ். இது கடந்த வாரம் அமேசான் ப்ரைமில் வெளியானது. இந்த தொடரை அலி அப்பாஸ் ஜாபர் என்பவர் இயக்கியிருந்தார். இந்த தொடரில் ஒரு இடத்தில் இந்து மதக் கடவுளை இழிவு செய்யும் விதமாகக் காட்சி படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து மத்திய தகவல்துறை ஒளிபரப்பு அமைச்சகம் இதுகுறித்து விளக்கமளிக்க சொல்லி அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.