1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 2 மே 2024 (16:46 IST)

இந்தியில் ரீமேக் ஆகிறதா ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ திரைப்படம்?

ஜெயம் ரவி நடித்த அடங்கமறு படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கார்த்திக் தங்கவேல். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரிடம் பல கதாநாயகர்கள் கதைக் கேட்டனர். ஆனால் யாரும் ஓகே செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அந்த பட்டியலில் சூர்யா, கார்த்தி மற்றும் விஷால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்தன. அந்த படத்தில் சுனில் ஷெட்டியின் மகன் அஹான் ஷெட்டி நடிப்பார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அஹான் ஷெட்டி மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கும் சங்கி என்ற படம் தொடங்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த படம்தான் அடங்கமறு படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டது. ஆனால் அதைப் படக்குழு மறுத்துள்ளது. இந்த படம் ஒரு காதல் கதை என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.