1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 27 ஏப்ரல் 2024 (10:57 IST)

காத்து வாங்கும் திரையரங்குகள்… விஷாலின் ரத்னம் முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?

ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து தயாராகியுள்ள படம் ‘ரத்னம்’. இந்த படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளில் கடந்த வாரம் முதலாகவே படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். நேற்று ரத்னம் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் பல திரையரங்குகளில் ரத்னம் படத்திற்கு குறைவான காட்சிகளே ஒதுக்கப்பட்டுள்ளது.

கில்லி ரீ ரிலீஸுக்கு அதிக திரைகள் ஒதுக்கி ரத்னத்தை ஓரம் கட்டுவதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் கில்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் அதை தூக்கிவிட்டு ரத்னம் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திரையரங்க உரிமையாளர்கள் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரத்னம் படம் நேற்று ரிலீஸான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. மார்க் ஆண்டனி படம் முதல் நாளில் வசூலித்ததலில் பாதியைக் கூட இந்த படம் வசூலிக்கவில்லை என்று திரையுலக வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாளில் 2 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்திருந்தாலே பெரிய விஷயம் என சொல்லப்படுகிறது.