பிரியங்கா சோப்ரா கர்ப்பமா? வைரலாகும் புகைப்படம்!

Last Modified செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (18:58 IST)
பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க பாடகர் நிக்கி ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பிரியங்காவுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அவரது சமீபத்திய புகைப்படம் ஒன்றில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்ற தோற்றம் தெரிவதாக வதந்திகள் பரவியது. இந்த புகைப்படமும் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலனது

இதனையடுத்து இதுகுறித்து விளக்கம் அளித்த பிரியங்காவின் தாயார் மதுசோப்ரா, 'அந்த ஒரு புகைப்படம் மட்டும் மோசனான ஆங்கிளில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அந்த ஒருபுகைப்படத்தில் பிரியங்காவின் வயிறு பெரிதாக தெரிவதாகவும் மற்ற புகைப்படங்களில் இதுபோல் இல்லை என்றும், உண்மையில் பிரியங்கா கர்ப்பம் என்ற தகவல் வதந்தியே என்றும் தெரிவித்தார்.


இதுகுறித்து பிரியங்கா சோப்ராம் கூறியபோது, 'இதுபோன்ற ஆயிரக்கணக்கான அர்த்தமில்லாத கேள்விகளுக்கு பதிலளித்து அலுத்துவிட்டதாக கூறினார். பிரியங்கா தற்போது தான் நடித்த ஹாலிவுட் படம் ஒன்றின் புரமோஷனில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :