வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (07:43 IST)

மீண்டும் காதலை முறித்துக் கொண்டாரா நயன்தாரா ?

நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் காதலை முறித்துகொண்டதாக பொய்யான செய்தி ஒன்று வெளியாகி வருகிறது.

நயன்தாரா கடந்த சில வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனைக் காதலித்து வருகிறார். இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருப்பதால் விரைவில்  திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இருவரும் புத்தாண்டை வெளிநாட்டில் கொண்டாடிவிட்டு தமிழகத்தில் கோயில்களில் வழிபாடு நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் விக்னேஷ் சிவன் இல்லாமல் நயன் மட்டும் தனியாக கலந்து கொண்டதால் இருவரும் பிரிந்து விட்டனர் என்ற பொய்யான செய்தி ஒன்று வெளியாக ஆரம்பித்தது. ஆனால் விக்னேஷ் சிவன் தனது திரைக்கதை அமைக்கும் பணிகளில் பிஸியாக இருப்பதால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் இருவரின் உறவில் எந்த விரிசலும் இல்லை எனவும் கூறப்படுகிறது.