வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (17:58 IST)

ரஜினியின் டான்ஸ், நயனின் ரொமான்ஸ்: ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட அசத்தல் வீடியோ!

ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாளில் இந்த படம் சென்சாருக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது இயக்குனர் முருகதாஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் 
 
இந்த வீடியோவில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா அட்டகாசமான டான்ஸ் ஆடும் காட்சிகள் உள்ளன. ’டம் டம்’ என்று ஆரம்பிக்கும் இந்த பாடலை நாகேஷ் அஜிஸ் என்பவர் பாடி இருக்கிறார். அனிருத் இசையில் விவேக் பாடல் வரிகளில் உருவாகியுள்ள அட்டகாசமான இந்த பாடல் தற்போது ரஜினி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது
 
ரஜினியின் இளமையான தோற்றம், சுறுசுறுப்பான நடனம் ஆகிய காட்சிகள் இந்த பாடலில் இருப்பதால் இந்தப் பாடல் திரையில் தோன்றும்போது ரஜினி ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமான், உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். லைகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.