செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (15:35 IST)

அமேசான் தளத்தில் சூரரைப் போற்றுவை முந்தியதா மாஸ்டர்?

அமேசான் தளத்தில் வெளியான இந்திய படங்களில் சூரரை போற்று திரைப்படம்தான் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்திருந்தது.

கொரோனா காரணமாக இந்தியாவில் படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்று வருகின்றன. தமிழில் அதுபோல சூரரைப் போற்று மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியான சூரரைப் போற்று திரைப்படம் அந்த தளத்தில் வெளியான இந்திய திரைப்படங்களில் அதிக நபர்களால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை படைத்தது.

ஆனால் இப்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இரண்டே வாரத்தில் அமேசான் தளத்திலும் வெளியானது. இப்போது சூரரைப் போற்று திரைப்படத்தை விட அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அமேசான் தளத்தில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.