மங்காத்தா -2 உருவாகிறதா? வெங்கட் பிரபுவிடம் கதை ரெடி! பிரபல நடிகர் தகவல்
நடிகர் அஜித் தனது முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வந்த நிலையில், தனது 50 வது படமான மங்காத்தாவின் வில்லனாக நடித்தார். இப்படமும் வெற்றி பெற்றது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.
அஜித் மற்றும் வெங்கட்பிரபுவின் ரசிகர்கள் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையி நடிகர் சுப்பு பஞ்சு, 10 வருடத்திற்கு முன் வெங்கட் பிரபு மங்காத்தா 2 கதையை தயாரித்துவிட்டதாகவும், இரண்டாவது பாகத்தில் நடிக்க அஜித் ஓகே சொன்னால் படம் தயார் என தகவல் தெரிவித்திருந்தார்.
சமூக வலைதளத்திலும் ரசிகர்கள் இதுகுறித்தே பேசி வருவதால் அஜித் சம்மதத்திற்காக வெங்கட் பிரபு காத்துக் கொண்டிருக்கிறார்.