எனது மற்றொரு தாயுமானவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் – வெங்கட் பிரபு உருக்கம்!
தமிழ் சினிமாவில் சென்னை -28 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநரான வெங்கட்பிரபு பின், மங்காத்தா படத்தை அஜித்தை வைத்தும், சூரியாவை மாஸ் என்கிற மாசிலாமணி படத்தையும் டிரைக்ட் செய்து இளம் இயக்குநர்களின் முன்னணியில் உள்ளார். சமீபத்தில் அவரது லாக் அப் படம் வெளியானது.
இந்நிலையில் ஃபை ஸ்டார் படத்தில் நடிகராக அறிமுகமாகி அஞ்சாதேவில் வில்லன் அவதாரம் எடுத்த பிரசன்னாவிற்கு அவர் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில் எனது சகோதரரும் இன்னொரு தாயுமான பிரசன்னாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கடவுள் அருள் அவருக்கு நிறைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.