திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 30 ஜனவரி 2019 (18:59 IST)

துப்பாக்கி 2-வில் இவரா..? விஜய்யை ஓரங்கட்ட முருகதாஸ் பிளான்!

துப்பாக்கி 2 படத்தில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் நடிக்கவிருப்பதாக தகவல் கிசுகிசுக்கப்படுகிறது .


 
நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற மெகா ஹிட் வெற்றிப்படங்களை அடுத்தடுத்து கொடுத்துவந்த முருகதாஸ் அதன் தொடர்ச்சியாக தற்போது துப்பாக்கி 2 படத்தை இயக்கவிருக்கிறார்.
 
இதனை பற்றி முருகதாஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூட  துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தனக்கு ஆசை இருப்பதாக தெரிவித்தார். 
 
இந்நிலையில் தற்போது  விஜய் மகன் சஞ்சய்யை வைத்து ‘துப்பாக்கி 2’ பாக படத்தை இயக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளார் என்று கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டும் உண்மை என்றால் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாடட்டமாக தான் இருக்கும். 
 
ஆனால் , இந்த தகவல் வெறும் வதந்தி என்று தான் கூறப்படுகிறது.