புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 27 ஜூன் 2019 (16:58 IST)

வீட்டில் முடங்கிய அனுஷ்கா! லாஸ்ட் டே ஷூட்டில் நடந்தது என்ன?

நடிகை அனுஷ்காவிற்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதால், சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்க வேண்டி சூழல் உருவாகியுள்ளது. 
 
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா உடல் எடையை குறைப்பதற்காக சில மாதங்கள் கேப் எடுத்து தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். 
 
தற்போது அனுஷ்காவின் கைவசம் சைலன்ட், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய தெலுங்கு படங்கள் உள்ளன. சைலன்ட் படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து வருகிறார் அனுஷ்கா. சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். 
 
சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்த போது அனுஷ்கா அதில் பங்கேற்றார். படப்பிடிப்பின் போது தவறி விழுந்ததால் கால் எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
சிகிச்சை முடிந்துள்ள நிலையில் இனி சில நாட்களுக்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், வீட்டில் ஓய்வு வெடுத்து வருகிறாராம்.