1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 டிசம்பர் 2020 (17:01 IST)

மேலும் தாமதமாகுமா வலிமை திரைப்படம்? காரணம் இதுதான்!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமாகலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

வலிமை படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அந்த படப்பிடிப்பின்போது அஜித்துக்கு இலேசான விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன . ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வலிமை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது; இந்த படப்பிடிப்பில் அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து கடைசி கட்ட படப்பிடிப்பை ஐரோப்பிய நாடுகளில் நடத்த முடிவு செய்திருந்தார் இயக்குனர் ஹெச் வினோத். ஆனால் உள் நாட்டிலேயே படத்தின் படப்பிடிப்புகளை நடத்தி முடிக்க உள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே படப்பிடிப்பு முடிந்து மே மாதம் முதல் தேதி அஜித் பிறந்தநாளில் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போதைய தகவலின் படி படத்தில் நிறைய கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளின் வேலை அதிகமாக உள்ளதால் அதனால் ரிலிஸ் தேதி மேலும் தாமதமாகும் என சொல்லப்படுகிறது. இது அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.