திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 7 ஜனவரி 2019 (18:02 IST)

இளையராஜா இசை நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான் ,எஸ்.பி.பி ? – விஷால் தகவல்

இளையராஜாவை சிறப்பிக்க தயாரிப்பாளர் சங்கத்தால் ஏற்பாடு செய்யபப்ட்டிருக்கும் இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ரஹ்மான் மற்றும் பாடகர் பாலசுப்ரமனியம் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜாவைக் கவுரவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இசை விழா ஒன்று பிப்ரவரி மாதம் 2, 3 ஆகியத் தேதிதிகளில்  சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடக்க இருக்கிறது. ஆனால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு இளையராஜா தரவேண்டிய ராயல்டி தொகை 50 கோடிக்கும் மேல் இருப்பதாகவும் அதைக் கொடுக்காமல் இளையராஜா இழுத்தடிப்பதாகவும் தயாரிப்பாளர்கள் சார்பில் பி டி செல்வக்குமார் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்குக்குப் பின்னால் விஷால் மற்றும் இளையராஜாவின் மீது காழ்ப்புணர்வுள்ள பாரதிராஜா மற்றும் தாணு போனறவர்களின் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் நடக்குமா ? நடக்காதா ? என்ற குழப்பத்தில் இருந்த நிலையில், விழா நடப்பதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று டிக்கெட் விற்பனையைத் தொடங்கி வைத்தார் விஷால். முதல் டிக்கெட்டை இளையராஜாவிடம் இருந்து நடிகர் சங்கத் தலைவர் நாசர் பெற்றுக்கொண்டார். இதையடுத்து டிக்கெட் விற்பனைப் பல இடங்களில் நடக்க இருக்கிறது.

இதற்கிடையில் பல்வேறு குழப்பங்களுக்கிடையில் இந்த விழா நடக்குமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த விஷால் ‘ இந்த நிகழ்ச்சிக் கண்டிப்பாக நடைபெறும். இந்த  விழா தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறுவது எங்கள் பாக்க்கியம். விழாவில் கலந்து கொள்ளுமாறு எஸ்.பி.பி.ஐ அழைத்துள்ளோம். அவருக்கு வேறு நிகழ்ச்சிகள் இல்லாத பட்சத்தில் கண்டிப்பாகக் கலந்துகொள்வார். மேலும் ஏ ஆர் ரஹ்மானையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுள்ளோம். அவர் கலந்து கொள்வது அல்லது அவரது பங்களிப்பு குறித்து விரைவில் அறிவிப்போம். இளையராஜாவின் வாழ்க்கையில் அவரோடு பயனித்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்தான் என்பது எங்கள்  ஆசை. அதனால் பாகுபாடின்றி அனைவரையும் அழைப்போம்’ எனக் கூறியுள்ளார்.

சிலத் தயாரிப்பாளர்கள் மத்தியில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில் விஷால் எஸ்.பி.பி. மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோரின் உதவிகளை நாடியுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் இருவரும் கலந்து கொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.