திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 25 டிசம்பர் 2018 (09:05 IST)

கவுதம் மேனன் பதவியை பறித்த விஷால்: பார்த்திபனுக்கு புதிய பதவி

சென்னையில் தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழு கூட்டம் நேற்று தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சங்க துணைத்தலைவர் கவுதம் மேனனுக்கு பதிலாக பார்த்திபன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்ட உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.

செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், 'ஜிஎஸ்டி குறைப்பால் சினிமா டிக்கெட்டிற்கான கட்டணம் குறையும் என்றும், அடுத்த செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழு தேதி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், இளையராஜா நிகழ்ச்சி தொடர்பாக முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி குறைப்பிற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி என்றும் விஷால் கூறினார்