புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 9 நவம்பர் 2020 (11:24 IST)

பெரிய பாகுபலியா? முதல் பாகத்தை ரிலீஸ் செய்யும் இருட்டறையில் முரட்டுக்குத்து டீம்!

திரையரங்குகள் நாளை முதல் திறக்கப்படும் நிலையில் பல திரையரங்குகளில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வெளியாக உள்ளது.

பாகுபலி 2 ஆவது பார்ட் ரிலீஸாவதற்கு முன்னர் பல திரையரங்குகளில் அதன் முதல் பாகம் ரிலீஸ் செய்யப்பட்டது. அந்த படத்தைப் பார்க்காதவர்கள் பார்த்துக்கொள்வதற்கு வசதியாக. அதற்கு பெரிய அளவில் கூட்டமும் கூடியது. இப்போது அது போல இரண்டாம் குத்து படம் ரிலீஸாக உள்ள நிலையில் அதன்  முந்தைய பாகமான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதௌ நெட்டிசன்கள் பாகுபலியோடு ஒப்பிட்டு கேலி செய்து வருகின்றன.