வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2020 (18:33 IST)

சினிமாவில் தகாத பேச்சுகள், வசனங்கள்... சின்னத்திரைக்கு தணிக்கைக் குழு கிடையாதா ??? நீதிமன்றம் கேள்வி

சின்னத்திரை மெகா தொடர்கள் மற்றும் சினிமாவில் தகாத பேச்சுகள் வசனங்கள் இடம்பெறுகிறது. எனவே தொலைக்காட்சித் தொடர்களுக்கு தணிக்கைக் குழு கிடையாதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சமீபத்தில் இரண்டாம் குத்து பட போஸ்டர் வெளியாகி கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தது.

பின்னர் அப்பட இயக்குநர் இயக்குநர் சங்க தலைவர் பாரதிராஜாவுக்கு எதிரான பேசினார். இதையடுத்து மன்னிப்புக் கேட்டார்.

இந்நிலையில், இரண்டாம் குத்து படத்தின் டீசர் மற்றும் படத்திற்குத் தடைவிதிக்கக்கோரி வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

அதில், சின்னத்திரை மெகா தொடர்கள் மற்றும் சினிமாவில் ஆபாசமான பேச்சுகள் வனசங்கள் இடம்பெறுகிறது. எனவே தொலைக்காட்சித் தொடர்களுக்கு தணிக்கைக் குழு கிடையாதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.