திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (10:25 IST)

விக்ரம் படத்தைக் காப்பி அடித்து உருவாக்கப்பட்டதா ஹாலிவுட் படம்? தயாரிப்பாளர் விக்ரம்!

விக்ரம் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான இருமுகன் திரைப்படத்தின் தழுவல்தான் ஹாலிவுட்டில் வெளியாகியுள்ள ஜாமி பாக்ஸின் பவர் பிராஜெக்ட் என சொல்லப்பட்டு வருகிறது.

விக்ரம், நயன்தாரா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இருமுகன் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிய பாராட்டுகளைப் பெறாவிட்டாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. 100 கோடி ரூபாய் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஹாலிவுட் முன்னணி நடிகர் ஜேமி பாக்ஸ் நடிப்பில் உருவான பவர் பிராஜெக்ட் என்ற படம் நெட்பிளிக்ஸில் வெளியானது. இந்த படம் இருமுகனின் தழுவல் என சொல்லப்பட்டது.

ஆனால் இதுகுறித்து இருமுகன் படத்தின் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் ‘நாங்கள் இருமுகன் படத்தின் ரீமேக் உரிமைகளை இதுவரை யாருக்கும் விற்கவில்லை. சமூகவலைதளங்களில் எழுந்துள்ள குழப்பங்களை இது தீர்க்கும் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.