வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2022 (10:53 IST)

விதிகளை மீறியது அம்பலம்..? விரைவில் அறிக்கை! – விக்னேஷ் சிவன் – நயன்தாராவுக்கு நெருக்கடி!

Nayanthara Surrogacy
விக்னேஷ் சிவன் – நயன்தாரா வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றது குறித்த விசாரணை நடந்து வரும் நிலையில் மருத்துவமனையிடம் விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடந்து முடிந்திருந்த நிலையில், திருமணமாகி 4 மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அவர்கள் பதிவிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர்கள் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைத்த விசாரணை குழு விசாரணையை தொடங்கியுள்ளது.


முதலில் வாடகைத்தாய் முறையில் விக்னேஷ்சிவன் தம்பதிக்கு குழந்தை பெற உதவிய மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டதில் விதிமீறல்கள் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை விசாரணை குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதை தொடர்ந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியிடமும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என பேசிக் கொள்ளப்படுகிறது.

Edited By Prasanth.K