1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2017 (18:10 IST)

ஹிந்தியில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள்

நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி, ஹிந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

 
தமிழ் உள்பட பல மொழிகளில் நடித்து, பாலிவுட்டில் செட்டிலானவர் ஸ்ரீதேவி. சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதேவி, தயாரிப்பாளரான போனி கபூரைத் திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே தங்கிவிட்டார். அவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு  மகள்கள் உள்ளனர்.
 
மூத்த மகளான ஜான்வியை ஹீரோயினாக அறிமுகப்படுத்த, பல வருடங்களாகவே பாலிவுட் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் முயன்று வந்தனர். ஆனால், படிப்பைக் காரணம் காட்டி மறுத்த ஸ்ரீதேவி, தற்போது ஓகே சொல்லிவிட்டார்.
 
ஷஷாங்க் கெய்த்தன் இயக்கும் ‘தடக்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஜான்வி. ஷாகித் கபூரின் தம்பியான  இஷான் கட்டாரும் இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மராத்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சாய்ரத்’  படத்தின் ரீமேக் இது. இந்தப் படத்தை கரண் ஜோஹர் தயாரிக்கிறார்.



இந்நிலையில், 'தடக்' படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். ஜான்வி கபூர்-இஷான் ஆகியோர் ரெமாண்டிக்காக இருக்கும் இந்தப் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.