வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 மே 2020 (16:20 IST)

கொரோனாவுக்குப் பின் சினிமாவில் முத்தக் காட்சிகள்! கைகொடுக்கும் புதிய தொழில்நுட்பம் !

கொரோனா ஊரடங்குக்கு பின் சினிமாவில் நெருக்கமான காட்சிகள் பிளாக்கிங் எனும் தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் என சொல்லப்படுகிறது.

கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் சினிமாவும். உலக அளவில் பல கோடி பேர் சினிமா எனும் கலையை நம்பி வாழும் சூழலில் ஒரே நாளில் அவர்கள் அனைவருக்கும் வேலை இல்லாத நிலையை கொரோனா உருவாக்கியுள்ளது. இந்நிலையில் விரைவில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் தொடரும் என்றாலும் சினிமாவுக்கு புதிய சிக்கல்கள் உருவாகியுள்ளன.

காதல் என்பது சினிமாவின் ஆக்ஸிஜன் மாதிரி. படத்தில் ரொமான்ஸ் காட்சிகள், முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகள் போன்றவற்றை தனி மனித இடைவெளியோடு இனிமேல் எப்படி படமாக்குவது என்ற குழப்பம் எழுந்துள்ள நிலையில் பிளாக்கிங் என்ற தொழில்நுட்ப முறையின் மூலமாக அதுபோன்ற காட்சிகளை படமாக்க உத்தேசித்துள்ளதாக சரிகமா நிறுவனத்தின் இந்தியாவின் துணைத் தலைவர் சித்தார்த் ஆனந்த்குமார் தெரிவித்துள்ளார்.