செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 18 மே 2020 (15:37 IST)

சொந்த ஊரில் தனிமைப்படுத்தப்பட்ட பேட்ட நடிகர்...!

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். தமிழகத்தில் நான்காம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவரவர் இருந்த இடத்தை விட்டு வேறு எங்கயும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக் குடும்பத்துடன் மும்பை வீட்டில் தங்கி இருந்தார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் புதனாவுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

அவர் செல்வதற்கு முன்பு  மகாராஷ்டிரா அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு அனைவருக்கும் கொரோனா தொற்று இருக்கிறதா என்று சோதித்து பின்னர் நோய் தொற்று இல்லை என்பது உறுதியானதால் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கடந்த சனிக்கிழமை அவர்கள் சொந்த ஊர் சென்றடைந்துள்ளனர். இதையடுத்து குடும்பத்தினருடன் அடுத்த 14 நாட்களுக்கு நவாஸுதீன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து, அவரது சகோதரர் கூறியதாவது. இன்னும் 14 நாட்களுக்கு நவாஸுதின் குடும்பத்தாரைத் தவிர்த்து வேறு யாரையும் சந்திக்க மாட்டார்’ என்று தெரிவித்தார்.