செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (16:41 IST)

சர்ச்சைக் கதையில் ஆர்வம்... புது ரூட் பிடித்த நாயகி

சர்ச்சைக்குரிய கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் ஹன்சிகா என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில். 
 

 
தமிழில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஹன்சிகாவுக்கு சமீபமாக பெரிய படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்த சில வாய்ப்புகளிலும் பெரிதாக சோபிக்க இயலவில்லை. இதனால், கவலையில் இருந்த அவர் திடீரென உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மானார். அதைத் தொடர்ந்து மற்ற நடிகைகளைப் போல நாமும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்த அவர் ஸ்ரீகாந்த் ஜோடியாக மஹா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தசூழலில் அவரின் தம் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. 
 
அதேபோல், முன்னாள் காதலர் சிம்புவுடன் இணைந்து நடிப்பதால் மஹா படத்துக்கு பப்ளிசிட்டி ஏகத்துக்கும் கிடைத்திருக்கிறது. இதனால், 5 நிமிடங்கள் மட்டுமே கேமியோ ரோலில் வருவதாக இருந்த சிம்புவின் கதாபாத்திரைத்தை கிட்டத்தட்ட அரை மணி நேரம் வருவது போல திரைக்கதையை மாற்றி எழுதியிருக்கிறார்கள். இதற்காக தானே சிம்புவிடம் போனில் பேசி சம்மதிக்க வைத்திருக்கிறார் ஹன்சிகா. பப்ளிசிட்டியால் மகிழ்ந்துபோயுள்ள ஹன்சிகா, தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் சர்ச்சைக் கதை ஏதாவது இருக்கிறதா...அதை முதலில் சொல்லுங்கள் என்று கேட்டு வருகிறாராம்.