வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (15:16 IST)

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ஐஸ்வர்யாராயிடம் விசாரணை

டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய  சினிமாவில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் முன்னணி தமிழில் ஜீன்ஸ், எந்திரன், ராவணன்,குரு உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது, மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் நடிகை ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யாராய் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பண முதலீடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தி வது குறிப்பிடத்தக்கது.