1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 9 டிசம்பர் 2021 (20:20 IST)

பொன்னியின் செல்வன் பாடல் வேலைகளை விறுவிறுப்பாக துவங்கிய ஏஆர் ரஹ்மான்!

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய காட்சி ஒன்றிற்கு பின்னணி இசை கோர்ப்பு வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் இசையமைப்பளார் ஏஆர் ரஹ்மான். அண்மையில் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதில் மணிரத்தினம் விவரிக்க தனது குழுவினருடன் ரஹ்மான் இசைக்கோர்ப்பு செய்கிறார். இந்த வீடியோ ரசிகர்ளுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)