வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2024 (14:54 IST)

இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகான ஃபர்ஸ்ட் லுக்! போஸ்டரை -இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டார்

சென்னையைச் சேர்ந்த ‘ஜஸ்ட் என்டர்டெயின்மெண்ட்’ எனும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம், தமிழகம் தொடங்கி மலேசியா, லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த ஆண்டு லைவ் இன் கான்சர்ட் நடத்தவிருக்கிறார்கள்.
 
அதன் முன்னோட்டமாக வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி திருப்பூரில், இசைஞானி இளையாஜா இசை நிகழ்ச்சி லைவ் இன் கான்சர்ட் ஆக நடக்கவிருக்கிறது.
 
அதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் விழாவுக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டிருக்கிறார்
 
இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு உதாரணம், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே  டிக்கெட்  விற்பனையின் உச்சத்தை எட்டியது