டிவி சீரியல் சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!
டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான அமந்தீப் சோகி நேற்று உயிரிழந்த நிலையில் இன்று அவரது சகோதரி டோலி சோகி இன்று உயிரிழந்தார்.
இந்தி தொலைக்காட்சி சீரியல்களான ஜனக், களாஷ் ஹலி உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் டோலி சோகி. இவரது அமந்தீப் சோகி. இவர் பிரபல சீரியல் தொடரான பெடமீச் டில் என்ற தொடரில் நடித்துள்ளார்.
அமந்தீப் சோகி மஞ்சல் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிக், டோலி சோகி கர்ப்பவாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனல டோலி சோகி சின்னத்திரை தொடர்களில் இருந்து விலகினார்.
நோயினால் பாதிக்கப்பட் இருவரும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில், மஞ்சல் காமாலையால் பாதிக்கப்பட்ட அமந்தீப் சோகி நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த நிலையில் கர்ப்பவாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அமந்தீப் சோகியின் தங்கை டோலி சோகீன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சின்னத்திரை நடிகைகள் இரு நாட்களில் அடுதத்து மறைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
சக நடிகர்கள்களும் ரசிகர்களும் மறைந்த நடிகைகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.