செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 அக்டோபர் 2021 (16:57 IST)

தொலைக்காட்சியில் 8 மணிநேரம் ஓடி சாதனைப் படைத்த கமல்ஹாசனின் படம்!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் ராஜ் தொலைக்காட்சியில் 3 ஆண்டுகள் கழித்து ஒளிபரப்பானது.

இமாலய வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை அப்போது ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இந்த படத்தை 1999 ஆம் ஆண்டு தீபாவளி அன்று நவம்பர் 17 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஒளிபரப்பு செய்தது.

இந்த படத்துக்கு அப்போதைய சூழ்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்த நிலையில் அதிகளவில் விளம்பரங்களை ஒளிபரப்பியது. இடையில் செய்திகளும் நேரத்தைப் பறித்துக்கொண்டதால் 12 மணிக்குதான் படம் முடிந்ததாம். கிட்டத்தட்ட 3.15 மணி நேரம் உள்ள படம் 8 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.