திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 மே 2022 (15:43 IST)

இந்திய நடிகர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!? – கேன்ஸ் திரைப்பட விழா!

Cannes
பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய சினிமா கலைஞர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்கள் நடைபெறும் நிலையில் அவற்றில் முக்கியமான விழாக்களில் ஒன்றாக கருதப்படுவது கேன்ஸ் திரைப்படவிழா.

பிரான்சில் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாட்டு படங்களும் திரையிடப்பட்டு விருதுகள் வழங்கப்படுகிறது.

சமீப காலமாக இந்திய சினிமா பிரபலங்களுக்கு கேன்ஸ் விழாவுடன் நல்ல உறவு ஏற்பட்டுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழா ஜூரியாக தீபிகா படுகோனே சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது வைரலானது.

அதுபோல கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில் தற்போது இந்திய சினிமா கலைஞர்களான ஏ ஆர் ரகுமான், நயன்தாரா, தமன்னா, அக்‌ஷய் குமார், மாதவன், பூஜா ஹெக்டே மற்றும் நவாசுதின் சித்திக் ஆகியோருக்கு கேன்ஸ் விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.