1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 11 மே 2022 (14:22 IST)

‘அஜித் 61’ படத்தில் இணைந்த தமிழ் திரைப்பட ஹீரோ!

ajith 61
அஜித் நடித்து வரும் 61வது படத்தில் நாயகியாக மஞ்சுவாரியர் நடிக்கவுள்ளார் என்பதும் இதனை அடுத்து முக்கிய கேரக்டரில் சார்பாட்டா பரம்பரை படத்தில் நடித்த ஜான் கொகேன் நடிக்கவுள்ளார் என்பதையும் பார்த்தோம். இவர்கள் இருவரும் இன்னும் ஓரிரு நாட்களில் ஹைதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி நடிகர் வீரா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் இணைந்து உள்ளதாக தெரிகிறது. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ’ராஜதந்திரம்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் என்பதும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
அனேகமாக ’அஜித் 61’  திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக நடிகர் வீரா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது